"சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கவேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்..!

0 1479

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்கு முந்தைய உதவித்தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 2022-23ஆம் ஆண்டு முதல் மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசின் இம்முடிவால், சுமார் ஐந்து லட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் பாதிக்கப்படுவார்கள் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments